கொடைக்கானலில் போலீசார் தீவிர கண்காணிப்பு..! வாகனங்கள் பறிமுதல்..!
kodaikanal
vehicle seized
police checking
By Anupriyamkumaresan
கொடைக்கானலில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே சுற்றும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒரு வாரத்திற்கு தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 25 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், தேவையின்றி வெளியே சுற்றும் வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தேவையின்றி வெளியே சுற்ற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பினர்.