கொடைக்கானலில் மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பொதுமக்கள்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுபடுத்தும் விதமாகவும், பொதுமக்கள் நலனுக்காகவும் ஒரு சில கட்டுபாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
இதில் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய பூங்காகளுக்கு சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களுக்கும் அனுமதி இல்லாத காரணத்தினால் இவை அனைத்தும் மூடபட்டுள்ளது.
மேலும் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பைன் மர சோலை, மோயர் சதுக்கம், குணா குகை, பில்லர் ராக், பசுமை பள்ளதாக்கு, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் அடைக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காட்சியளிகிறது. தொடர்ந்து அரசு அறிவித்துள்ள கட்டுபாடுகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொடைக்கானல் நுழைவாயில் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் வெளியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க கூடுதலாக காவல்துறை, சுகாதாரத்துறை, மருத்துவதுறை, வருவாய் துறை ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுத்த உள்ளதாக வட்டாசியர் சந்திரன் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா தளங்கள் மூடப்படுவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அரசாங்கம் தங்களுக்கு உரிய உதவிகளை செய்து தர வேண்டும் என்றும் வியாபாரிகள் நேற்று கொடைக்கானலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்