தளர்வுகளற்ற முழு ஊரடங்கு..! வெறிச்சோடி காணப்பட்ட கொடைக்கானல்..!

fulllockdown kodaikanal dindigul police check
By Anupriyamkumaresan May 24, 2021 08:04 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கொடைக்கானலில் காய்கறி, மளிகை கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காய்கறி கடைகள் , மளிகை கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டு முக்கிய சாலைகள் எங்கும் வெறிச்சோடி காணப்படுகிறது.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு..! வெறிச்சோடி காணப்பட்ட கொடைக்கானல்..! | Kodaikanal Policecheck Fulllockdown

மேலும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே திரியும் பொதுமக்களை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்புகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவு படி, பொதுமக்களின் தேவைக்காக வாகனம் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் பணியை நகராட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.