மது வாங்கி கொடுத்து 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - பாய்ந்தது குண்டர் சட்டம்!
கொடைக்கானலில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 3 நபர்களை போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 16ஆம் தேதி செண்பகனூர் பகுதியில், கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்றாக இணைந்து 15 வயது சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது குறித்து பெற்றோர்கள் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிறுமியின் மாமா கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் ராஜ்குமார், மணிகண்டன் உள்ளிட்டோரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 3 நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் பேரில், 3
நபர்களையும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.