நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - திருவள்ளூர்
தமிழ்நாட்டின் முதல் நாடாளுமன்ற தொகுதி திருவள்ளூர் .
திருவள்ளூர்
2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது, உருவாக்கப்பட்ட மக்களவை தொகுதி திருவள்ளூர். ஆனால் முன்னர் இந்த தொகுதியில் 1951 முதல் 1962 வரை மூன்று நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), பூந்தமல்லி(தனி தொகுதி), திருவள்ளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும், புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, மாதவரம் சட்டமன்றத் தொகுதிகளையும் சேர்த்து திருவள்ளூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
தேர்தல் வரலாறு
1951 மரகதம் சந்திரசேகர் (காங்கிரஸ்)
1957 ஆர்.கோவிந்தராஜுலு நாயுடு (காங்கிரஸ்)
1962 வி. கோவிந்தசாமி நாயுடு (காங்கிரஸ்)
2009 பொ. வேணுகோபால் (அதிமுக)
2014 பொ. வேணுகோபால் (அதிமுக)
2019 கே. ஜெயக்குமார் (காங்கிரஸ்)
வாக்காளர்கள்
இந்த தொகுதியில் மொத்தம் 2019 -ஆம் ஆண்டின் தேர்தல் கணக்கீட்டின் படி,
ஆண் வாக்காளர்கள் -9,49,684
பெண் வாக்காளர்கள் - 9,70,347
மூன்றாம் பாலினத்தவர் -341 என மொத்தம் 19,20,372 வாக்காளர்கள் உள்ளனர்.