டோக்கியோவில் பயணிகள் ரெயிலில் கத்திக்குத்து தாக்குதல்: 10 பேர் காயம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நகரில் ரயிலில் பயணித்த மர்ம நபர் கத்திகுத்து தாக்குதல் 10 பேர் காயமடைந்தனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி ஆகஸ்ட் 8 ஆம் தேதியான இன்றுடன் நிறைவடைகிறது.
ஒலிம்பிக் தொடர் காரணமாக டோக்கியோ நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று இரவு டோக்கியோ பயணிகள் ரயிலில் பயணிந்த நபர் ஒருவர், சக பயணிகளை கத்தியால் தாக்க தொடங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடுமையான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே தாக்குதல் நடத்திய நபரை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
ரயிலில் சிரித்தப்படி மகிழ்ச்சியாக இருந்த பெண்களை பார்த்ததும் அவர்களை கொல்ல வேண்டும் என்று தோன்றியதாக கூறிய அந்த நபர், கிழ்ச்சியாக பெண்களை பார்த்தால் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கடந்த 6 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதையடுத்து முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.