பேரரசு போல் தளபதி..சிற்றரசு போல் உதயநிதி...புகழ் பாடிய கே.என்.நேரு - வறுத்தெடுக்கும் ஜெயக்குமார்

Udhayanidhi Stalin M K Stalin DMK K. N. Nehru Tiruchirappalli
By Thahir Dec 29, 2022 09:42 AM GMT
Report

திருச்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேரரசு போல் தளபதி..சிற்றரசு போல் உதயநிதி என அமைச்சர் கே.என்.நேரு பேச்சிய நிலையில், திமுக அரச குடும்பம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து முதல்வர் அவர்கள் ரூ.238 கோடி மதிப்பில் 5 ஆயிரத்து 635 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.

KN Nehru

அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.308 கோடி மதிப்பில் 5,951 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

புகழ்ந்த அமைச்சர் கே.என்.நேரு - விமர்சிக்கும் ஜெயக்குமார்

ரூ.79 கோடி மதிப்பில் 22,716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு அவர்கள், பேரரசு போல் தளபதி, சிற்றரசு போல் உதயநிதி என தெரிவித்திருந்தார்.

KN Nehru

இதுகுறித்து ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ திமுக ஜனநாயக கட்சி இல்லை அரச குடும்பம் என்பதை மேடையில் உறுதி செய்தார் கே.என்.நேரு’ என பதிவிட்டுள்ளார்.