என்னைப் பார்த்து ஏன் அந்த கேள்வி கேக்குறீங்க? - பத்திரிக்கையாளரிடம் கோபப்பட்ட கே.எல்.ராகுல்
பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இந்திய டி20 கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் கடுப்பான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் வழிகாட்டுதலின்படி இந்திய அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.
இதனிடையே தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடித்ததால் டெல்லி நகரப்பகுதி காற்று மாசு அடைந்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதே போலத்தான் ஜெய்ப்பூர் நகரத்திலும் காற்று மாசுபாடு அதிகரித்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் பத்திரிக்கையாளரை சந்தித்தார்.
அப்போது அவரிடம் காற்று மாசுபாடு இங்கே எப்படி இருக்கிறது என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு நாங்கள் இன்னமும் வெளியே போய் பார்க்கவில்லை. நேரடியாக தங்குமிடத்தில் இருந்து பேருந்து மூலமாக மைதானத்துக்கு வந்து சேர்ந்தோம். எனவே இதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது என தெரிவித்தார்.
மேலும் காற்று மாசுபாடு மீட்டர் ஒன்றை நான் கையில் வைத்துக்கொண்டு அலையவில்லை. அப்படி வைத்திருந்தால் காற்று எவ்வளவு மாறுபாடு அடைந்துள்ளது என்பதை பார்த்து சொல்லிவிடுவேன். ரொம்ப மோசமாக பாதிப்பு இருக்காது என்று நான் நம்புகிறேன். நாங்கள் இங்கே வந்திருப்பது கிரிக்கெட் விளையாடுவதற்காக என டென்ஷனாகி பதிலளித்தார். இதனால் அந்த பத்திரிக்கை