நான் தாண்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு: வரலாற்று சாதனை படைத்த கே.எல்.ராகுல் அதிர்ச்சியில் இங்கிலாந்து பவுலர்கள்!

klrahul ENGvIND
By Irumporai Aug 12, 2021 07:00 PM GMT
Report

 இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் சதம் அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணிக்கு தொடக்கமே சிறப்பாக அமைந்துள்ளது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவின் ஓப்பனிங் ஜோடி ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல்  மிகசரியாக எதிர்கொண்டு ரன் குவித்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 126 ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடி வந்த நிலையில்  ரோகித் சர்மா, 83 ரன்களுக்கு வெளியேறினார். அதே சமயம் கே.எல்.ராகுல் நிதானமாக ரன்களை குவித்தார்.

இங்கிலாந்து பவுலர்கள் பந்து வீச்சினை வெகு சுலபமாக எதிர்கொண்ட கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தினார்.

அதில் ஒரு சிக்ஸரும் 9 பவுண்டரிகளும் அடங்கும். ராகுலின் இந்த சதம் இந்தியாவுக்கு ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது ஏனென்றால் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடிப்பது என்பது மிகபெரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.அங்கு சதமடித்த 3வது இந்திய ஓப்பனர் என்ற பெருமையை ராகுல் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் அங்கு 1952ம் ஆண்டு வினோ மான்கட் 184 ரன்களை விளாசியிருந்தார்.அதன் பின்னர் 1990ம் ஆண்டு ரவி சாஸ்திரி 100 ரன்களை அடித்தார்

ஆசிய கண்டத்திற்கு வெளியில் அதிக சதம் அடித்த இந்திய ஓப்பனிங் வீரர்களின் பட்டியலில் கே.எல்.ராகுல் 2வது இடத்தை சேவாக்குடன் பகிர்ந்துள்ளார்.

சுனில் கவாஸ்கர் 15 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். விரேந்திர சேவாக் 4 சதங்களுடன் 2வது இடத்திலும், வினோ மான்கட் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் 3 சதங்களுடன் 3வது இடத்திலும் உள்ளன

இந்த நிலையில்  ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 90 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 276 ரன்களை எடுத்துள்ளது.