மிக மோசமான சாதனை படைத்த கே.எல்.ராகுல் - வேதனையில் ரசிகர்கள்

bcci viratkohli klrahul msdhoni rohitsharma rahuldravid INDvSA
By Petchi Avudaiappan Jan 24, 2022 11:59 PM GMT
Report

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக இழந்ததன் மூலம் கேப்டன் கே.எல்.ராகுல் மிக மோசமான சாதனை ஒன்றை வேதனையுடன் படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. ஏற்கனவே 2 போட்டிகளில் தோல்வியடைந்து 2-0 என தொடரை இழந்த இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியடைந்து தொடரை முழுவதுமாக இழந்தது. இதனால் இந்திய அணி மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 

இந்த தொடரை இந்திய அணி முழுமையாக இழந்ததன் மூலம் இந்திய அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் மிக மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். கேப்டனாக தனது முதல் மூன்று போட்டியிலும் தோல்வியை சந்தித்த முதல் இந்திய கேப்டன் என்ற மோசமான வரலாற்றில் கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ளார்.

இதற்கு முன் வேறு எந்த கேப்டனும் தங்களது முதல் மூன்று ஒருநாள் போட்டியிலும் தோல்வியை சந்தித்தது இல்லை. அதே போல் டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியிலும் கே.எல் ராகுல் தலைமையில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளதால்கடந்த 1960 ஆம் ஆண்டிற்கு பிறகு தனது முதல் நான்கு போட்டியிலும் தோல்வியை சந்தித்த கேப்டன் என்ற வரிசையிலும் கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ளார்.