லிவ்-இன் ; காதலியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் கே.எல்.ராகுல் - மாத வாடகையே இத்தனை லட்சமா?

Lucknow Super Giants
By Swetha Subash Apr 22, 2022 12:02 PM GMT
Report

நடப்பாண்டுக்கான ஐபிஎல் 15-வது சீசனில் கே.எல்.ராகுல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் பஞ்சாப் அணியின் கேப்டனாக விளையாடி இருந்தார்.

லிவ்-இன் ; காதலியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் கே.எல்.ராகுல் - மாத வாடகையே இத்தனை லட்சமா? | Kl Rahul With Girlfriend To Rent An Apartment

இந்நிலையில் நடிகை அதியாவுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வரும் கே எல் ராகுல் தற்போது மும்பையில் ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை பாந்த்ராவில் உள்ள கார்ட்டர் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை அதியா ஷெட்டியுடன் கே எல் ராகுல் வசிக்க உள்ளதாகவும் இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கான மாத வாடகை 10 லட்சம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த புதிய குடியிருப்பில் கே.எல் ராகுல் தனது காதலி அதியாவுடன் விரைவில் குடியேறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.