கே.எல். ராகுல் திருமணம் - கோடிக்கணக்கில் பரிசு கொடுத்த விராட் கோலி, எம்.எஸ்.தோனி..! வாயடைத்த ரசிகர்கள்...!

MS Dhoni Virat Kohli KL Rahul Marriage
By Nandhini Jan 25, 2023 11:20 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் திருமணத்திற்கு விராட் கோலியும், எம்.எஸ்.தோனியும் கோடிக்கணக்கில் பரிசு கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கோடிக்கணக்கில் பரிசு கொடுத்த விராட் கோலி, எம்.எஸ்.தோனி

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை கடந்த திங்கள்கிழமை, கண்டலாவில் உள்ளரங்கில் திருமணம் நடைபெற்றது.

இத்திருமணத்திற்கு பாலிவுட் சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆனால், விராட் கோலி, ரோகித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை.

நியூசிலாந்துக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் விளையாடி வந்ததால் இத்திருமணத்தில் இந்திய அணி வீரர்கள் கலந்து கொள்ளவில்லை.

விராட் கோலி இத்திருமணத்திற்கு வரவில்லையென்றாலும், ராகுலுக்கும் அதியாவுக்கும் மறக்க முடியாத பரிசை வழங்கியுள்ளார்.

கே.எல்.ராகுலுக்கும் அதியாவுக்கும் விராட் கோலி திருமண பரிசாக பிஎம்டபிள்யூ காரை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் காரின் மதிப்பு ரூ.2.17 கோடியாகும்.

அதேபோல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் கே.எல்.ராகுலின் திருமணத்திற்கு விலைமதிப்பற்ற பொருளை பரிசாக கொடுத்துள்ளார். தோனி கவாஸாகி நிஞ்சா பைக்கை பரிசாக கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பைக்கின் மதிப்பு ரூ.80 லட்சமாகும். 

kl-rahul-wedding-gifts-virat-kohli-ms-dhoni-crores