ஒருத்தரை தொட்டாலும் சும்மா விட மாட்டோம் - எச்சரிக்கை விடுத்த கே.எல்.ராகுல்
போட்டிக்களத்தில் வார்த்தைப் போரில் ஈடுபடுவது பிடிக்கும் என இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இப்போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் கடுமையான வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி வீரர்களின் கள பங்களிப்பு இருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், இரு பலமான அணிகள் மோதும்போது இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது சாதாரணமானது என தெரிவித்துள்ளார்.
மேலும் எங்களுக்கும் சிறிது வார்த்தை போரில் ஈடுபடுவது பிடிக்கும். ஆனால் எங்களில் ஒரு வீரரை மட்டும் குறி வைத்து எதிரணியினர் தாக்கினாலோ அல்லது பேசினாலோ நாங்கள் 11 பேரும் அவருக்கு பக்கபலமாக நின்று பதிலடி கொடுப்போம் எனவும் கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.