கே.எல்.ராகுல் மீது பாட்டில் 'கார்க்' வீச்சு - காண்டான விராட் கோலி

angry viratkohli kl rahul
By Anupriyamkumaresan Aug 15, 2021 06:15 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியின்போது நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் பீல்டிங் செய்துக்கொண்டிருந்த கே.எல்.ராகுல் மீது சிலர் பாட்டில் கார்க் மூடிகளை வீசியது சர்ச்சையானது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்பு இந்திய வீரர் கே.எல் ராகுல் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்துகொண்டிருந்தார்.

கே.எல்.ராகுல் மீது பாட்டில்

முகமது ஷமி வீசிய 69-வது ஓவரின்போது, பாட்டில் மூடி ஒன்று ராகுல் மீது வீசப்பட்டது. இதனால் கோபமடைந்த இந்திய கேப்டன் விராட் கோலி அதை வெளியே வீசும்படி ராகுலிடம் கூறினார்.

இதனால் நடுவர்கள் மைக்கேல் கௌ மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வர்த்திடம் இந்திய வீரர்கள் இதுகுறித்து பேசியதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. அப்போது கோலி மிகவும் கோபமாக காணப்பட்டார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பாக காணப்பட்டார்.