கேப்டன் பதவியில் இருந்து கழட்டி விடப்படும் ரோகித் சர்மா - புதிய கேப்டன் இவரா?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்பது சந்தேகம் தான் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்கியது.
இதனிடையே இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக காயம் காரணமாக துணை கேப்டன் ரோகித் சர்மா விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டார்.
ஆனால் கேப்டன் விராட் கோலி உடனான மனக்சப்பு காரணமாக தான் ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. பின்னர் ககையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு பிரச்சினை காரணமாக தான் விலகினார் என ரோகித் சர்மா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் ஒருநாள் தொடரில் நிச்சயம் கலந்துகொள்வார் எனக்கூறப்பட்டது.
இந்நிலையில் ரோகித் சர்மாவின் உடல்நிலை குறித்து இந்திய அணிக்குள் அவசர மீட்டிங் நடைபெற்றுள்ளது. ரோகித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமியில் உடற்தகுதியை மேம்படுத்தி வருகிறார். அவருக்கு பாதிப்பு இன்னும் இருப்பதால் ஒருநாள் தொடரிலும் பங்கேற்பது சந்தேகமே என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அடுத்ததாக யாரை கேப்டனாக நியமிக்க இந்த கூட்டம் நடந்துள்ளது. ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக விராட் கோலி தான் அணிக்குள் அனுபவமும், சீனியராகவும் உள்ளார். ஆனால் அவரிடம் கேப்டன்சி ஒப்படைக்க வாய்ப்பில்லை என்பதால் கே.எல்.ராகுல் தான் ஒருநாள் அணியை வழிநடத்துவார் என கூறப்படுகிறது.