வாத்தி கம்மிங்..இனி சிறப்பாக விளையாடுவோம் - உறுதியளித்த கே.எல்.ராகுல்

KL Rahul Coach Rahul Dravid
By Thahir Nov 16, 2021 09:18 PM GMT
Report

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். டிராவிட் எப்போதும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் மனிதர்.

மேலும் திறமையான வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு போதிய ஆதரவை வழங்கி அவர்களுக்கு உதவி செய்பவர். திறமையும், உழைப்பையும் கொட்ட வீரர்கள் தயாராக இருந்தால், அவர்களை ஏற்றிவிட்டு அழகு பார்ப்பவர்.

டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். வீரர்களுக்கு ஏற்ற நல்ல சூழலை டிராவிட் உருவாக்குவார்.

அவர் இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக இருந்த போது, நான் 2 போட்டிகளில் விளையாடி இருந்தேன். அப்போது நான் சிறப்பாக செயல்பட்டதாக உணர்ந்தேன்.

அதே போன்ற ஒரு சூழல் இந்திய சீனியர் அணியிலும் டிராவிட் உருவாக்குவார். இதனால் இனி சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறேன் என்று கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

கே.எல்.ராகுல் டி-20 போட்டிகளுக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது முதல் சவாலாக இந்திய அணி பலம் வாய்ந்த நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.

கே.எல். ராகுலோ, இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களின் இன் சுவிங் பந்துகளை எதிர்கொள்ள சற்று திணறுகிறார். டி-20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அத்தகைய பந்தில் தான் ஆட்டமிழந்தார்.

அதே யுத்தியை நியூசிலாந்தும் பின்பற்றும் என்பதால், கே.எல்.ராகுல் அதனை எதிர்கொள்வதே பெரிய சவாலாக இருக்கும்.

நியூசிலாந்துக்கு எதிரான ஆடுகளம் மிகவும் சிறிய மைதானம் என்பதால் இந்திய அணி ஒரு சுழற்பந்துவீச்சாளரை மட்டும் வைத்து விளையாட திட்டமிட்டுள்ளது.

இதனால் 3 வேகப்பந்துவீச்சாளர், ஒரு ஆல் ரவுண்டர் , ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற எண்ணிக்கையில் இந்திய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.