பஞ்சாப் அணியை விட்டு விலகியது ஏன்? - உண்மையை சொன்ன கே.எல்.ராகுல்
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இருந்து ஏன் விலகினேன் என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. அதேசமயம் அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் புதிதாக இடம் பெற்றுள்ளன. இதில் லக்னோ அணிக்கு பஞ்சாப் அணியில் இருந்து விலகிய கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 4 வருடமாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த கே.எல் ராகுல் அந்த அணியிலிருந்து வெளியேறியது ஏன் என்ற காரணம் புரியாமல் அவரது ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இந்நிலையில் கே.எல்.ராகுல் அதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில். 4 வருடமாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியது நல்ல அனுபவமாக இருந்தது. வேறு அணிக்காக ஆட விரும்பியதால் பஞ்சாப் அணியில் இருந்து விலகினேன். அவ்வளவுதான் இதில் யோசிக்க ஒன்றுமேயில்லை என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.