“இந்த ஒரு விஷயம் எவ்வளோ முக்கியம்னு தெ.ஆப்பிரிக்க வீரர்கள் எங்களுக்கு காட்டிட்டாங்க” - தோல்வி குறித்து கே.எல்.ராகுல் பேச்சு

opens up kl rahul mistakes test series india vs sa south africa won 2-0
By Swetha Subash Jan 22, 2022 07:00 AM GMT
Report

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 85 ரன்களும், கே.எல் ராகுல் 55 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, போட்டியின் முதல் ஓவரில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக அடித்து விளையாடியது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் 66 பந்துகளில் 78 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். மற்றொரு துவக்க வீரரான ஜென்னாமென் மாலன் 91 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இதன்பின் வந்த டெம்பா பவுமா, மார்கரம் மற்றும் வான் டெர் டூசன் என அனைத்து வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததன் மூலம்,

48.1 ஓவரிலேயே இலக்கை ஈசியாக எட்டி தென் ஆப்ரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா அணி கைப்பற்றியது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல்,

“தென் ஆப்பிரிக்கா அணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மிடில் ஆர்டரில் நாங்கள் மீண்டும் சில தவறுகள் செய்துவிட்டோம்.

இந்த தோல்வியின் மூலம் நாங்கள் பல விசயங்களை கற்று கொண்டோம். இந்த தோல்வியின் மூலம் கற்றுகொள்ள வேண்டிய விசயம் தான் அதிகம் உள்ளது, தோல்வியில் இருந்து நிச்சயம் மீண்டு வருவோம் என நம்புகிறேன்.

மிடில் ஆர்டரில் எங்களுக்கு பார்ட்னர்சிப் சரியாக அமையவில்லை, ஆனால் மிடில் ஆர்டர் பார்ட்னர்சிப் எவ்வளவு முக்கியமானது என்பதை தென் ஆப்ரிக்கா வீரர்கள் எங்களுக்கு காட்டிவிட்டனர்.

தவறுகளை நிச்சயம் சரி செய்து கொண்டு அடுத்த போட்டியில் வெற்றி பெற போராடுவோம்” என்று தெரிவித்தார்.