ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை படைத்த கே.எல்.ராகுல்..!
ஐபிஎல் போட்டியில் அதிக சதம் அடித்த இந்தியர் என்ற சாதனை படைத்தார் கே.எல்.ராகுல்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது.
பொறுப்புடன் ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் 62 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 103 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார் அடுத்து இறங்கிய மும்பை அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்தியர்கள் பட்டியலில் ரோகித் சர்மா சாதனையை லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் நேற்று சமன் செய்தார்.
இருவரும் தலா 6 சதங்கள் அடித்துள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து, விராட் கோலி 5 சதமும், சுரேஷ் ரெய்னா 4 சதமும் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.