அரை நிர்வாண கோலத்தில் கே.எல்.ராகுல் - புகைப்படத்தை பகிர்ந்த நடிகை கஸ்துாரி..!
பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் உள்ளாடை விளம்பரத்தில் நடித்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பகத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை கஸ்துாரி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கஸ்துாரி இவர் தற்போது தமிழில் விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’, ‘உன் காதல் இருந்தால்’ ‘கருட சுத்ரு’.ஆகிய படங்களிலும், தெலுங்கில் ‘சிம்பா’, ‘மிஸ்டர் கர்ப்பம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
அவவ்போது சமூக ஆர்வலராகவும் இருந்து வரும் இவர் அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்குவார்.
இந்த நிலையில் தற்போது நடிகை கஸ்துாரி இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அரை நிர்வாணத்தில் உள்ளாடை விளம்பரத்தில் நடித்துள்ள அவரின் புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர்,
We see cricketers plug colas ,chips & online games. Many Indian sportsmen have endorsed clothing brands, but have shied away from undergarment labels.
— Kasturi Shankar (@KasthuriShankar) May 30, 2022
So it's nice to see @klrahul looking buff in boxers.
Hope this brings menswear out of the closet. Pun intended :)) #PostIPL_Post pic.twitter.com/MFA0Glc9kt
கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலும், “கோலாக்கள், சிப்ஸ் மற்றும் ஆன்லைன் கேம்கள் தொடர்பான விளம்பரங்களில் நடித்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.
அதே சமயம் பல இந்திய விளையாட்டு வீரர்கள் ஆடை பிராண்டு விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். ஆனால் உள்ளாடை தொடர்பான விளம்பரங்களில் நடிப்பதில் இருந்து விலகிவிட்டனர்.
ஆனால் தற்போது கே.எல்.ராகுலை குத்துச்சண்டை வீரர்களுக்கு டஃப் கொடுக்கும் ஒருவரைப்போல் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இது ஆண்கள் ஆடைகளை அலமாரியில் இருந்து வெளியே கொண்டுவரும் என்று நம்புகிறேன் என்று புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.