''அந்த ஒரு பையன் போதும் சார் நம்ம டீம்முக்கு'' - கே.எல் ராகுலை புகழ்ந்த முன்னாள் வீரர்
இந்திய அணியின் துவக்க வீரர் கேஎல் ராகுல் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் பாராட்டிப் பேசியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலயில் இந்திய அணி, அடுத்ததாக தென் ஆப்ரிக்கா அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.
தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 26ம் தேதி துவங்க உள்ளது. தென் ஆப்ரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்பதால் இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுத்த கே எல் ராகுல் தற்போதைய இந்திய அணியின் பிரதான துவக்க வீரராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கே எல் ராகுல் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் :
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக செயல்பட்ட மாயக் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்ட கேஎல் ராகுல் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டுள்ளார்.
இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருவது மிகச் சிறப்பான விஷயமாகும். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் மிக சிறந்த முறையில் செயல்பட்டு தனது திறமையை நிரூபித்துள்ளார்.
மேலும் தற்பொழுது சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள கே எல் ராகுலுக்கு தொடரை எப்படி வெல்ல வேண்டும் என்பது நன்றாக தெரியும் என்று கேஎல் ராகுலை விவிஎஸ் லக்ஷ்மன் பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.