என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா? - இந்திய வீரருக்கு பதாகையை காட்டிய ரசிகை , வைரலாகும் புகைப்படம்

klrahul fangirl indvsnz
By Irumporai Nov 23, 2021 09:50 AM GMT
Report

கொல்கத்தா மைதானத்தில் பெண் ரசிகை ஒருவர் இளம் இந்திய வீரரைப் பார்த்து திருமணம் செய்துகொள்ளுமாறு பாதகையுடன் நின்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  நியூசிலாந் அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடந்து முடிந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இதன் கடைசி டி20 போட்டி நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில், இப்போட்டியின் போது பெண் ரசிகை ஒருவர், இந்திய அணியின் இளம் வீரர் கே.எல்.ராகுலை திருமணம் செய்துகொள்ள வேண்டி பாதகையை காண்பித்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.