Back to work... - டெஸ்ட் தொடருக்காக தீவிர பயிற்சி எடுத்த கே.எல்.ராகுல்.. - வைரலாகும் வீடியோ..!
திருமணம் முடிந்த கையோடு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியின் டெஸ்ட் தொடருக்காக கே.எல்.ராகுல் கடும் உடற்பயிற்சியை மேற்கொண்டார்.
கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்
பாலிவுட் நடிகை அதியா ஷெட்டிக்கும் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும் கடந்த ஜனவரி 23ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமண ஜோடி பெற்ற பரிசுகள் குறித்த சமீபத்தில் பல தகவல்கள் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கோடிக்கணக்கில் குவிந்த பரிசுகள்
சுனில் ஷெட்டி, கே.எல்.ராகுலுக்கும் அவரது மகள் அதியா ஷெட்டிக்கும் ரூ.50 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை பரிசாக அளித்தார். விராட் கோலி, கே.எல் ராகுலுக்கு ரூ.2.17 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை வழங்கினார். எம்.எஸ். தோனி ரூ.80 லட்சம் மதிப்புள்ள கவாஸாகி நிஞ்சா பைக்கை பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது.
தீவிர பயிற்சியில் ஈடுபட்ட ராகுல்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், திருமணம் முடிந்த கையோடு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக கே.எல்.ராகுல் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது இது குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த இவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Back to work! ?? #KLRahul pic.twitter.com/pg7ReWU6Z0
— Kunal Yadav (@kunaalyaadav) January 26, 2023