கே.எல்.ராகுலை தட்டி தூக்கிய பிசிசிஐ

Indian Team Captain KL Rahul BCCI
By Thahir Jan 01, 2022 10:27 AM GMT
Report

2022ஆம் புத்தாண்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியுடன் பிறந்துள்ளது.

ஆம், இனி ரசிகர்களாகிய நீங்கள் விரும்பும் பல வீரர்கள் இந்திய அணியில் அறிமுகமாக உள்ளனர்.

இன்னும் சொல்லப்போனால் அடுத்த தலைமுறைக்கான தயார் நிலையில் உள்ள இந்திய அணி வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் கே.எல்.ராகுல் கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் ஷாரூக்கான் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை இது குறித்து தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் அனுபவமும், இளமையும் கலந்த அணியை உருவாக்கியதாக தெரிவித்தார்.

அதன் பிறகு இந்தியாவில் அடுத்தடுத்து மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்த தொடரில் சுழற்பந்துவீச்சாளர் பிஸ்னாய், வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான். அதிரடி வீரர் ஷாரூக்கான், ஐ.பி.எல். தொடரில் கலக்கிய ஹர்சல் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதன் மூலம் தென்னாப்பிரிக்க தொடருக்கு பிறகு சீனியர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு பெரும்பாலான இளம் வீரர்களை வைத்தே இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியும், அடுத்த ஆண்டு ஐ.சி.சி. உலகக் கோப்பையும் நடைபெறுகிறது. இதற்கான அணியை உருவாக்க, நடப்பாண்டிலேயே பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.