நாங்கள் தூங்குகிறோம், எழுகிறோம், அவ்வளவு தான் கே.எல்.ராகுல் உருக்கம்..!
மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிறது இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள்.
இதையடுத்து பல்வேறு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக அனைத்து வீரர்களும் பயோ-பபிளில் இருக்கின்றனர்.
இந்நிலையில் பயோ-பபிளில் உள்ள கே.எல்.ராகுல் மனம் திறந்து உருக்கமாக பேசியுள்ளார். தொடக்கத்தில் எல்லாம் சரியாக சென்று கொண்டு இருந்தது. ஆனால் கடைசியாக நான் விளையாடிய இரண்டு தொடர்கள் எனக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது.
அதுவும் என்னை நானே ஊக்கப்படுத்திக் கொள்வது மிகவும் சவாலாக இருந்தது. கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது.
அதனால் நாம் இதில் இருந்து தான் ஆக வேண்டும் என பயோ-பபிள் அறிமுகமான ஆரம்ப நாட்களில் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். குறிப்பாக குடும்பத்தை அதிகமாக தேடுகிறோம்.
நமது குடும்பமும், நண்பர்களும் தான் நம்மை இயல்பாக உணரச் செய்வார்கள் . ஆனால் நாங்கள் தூங்குகிறோம், எழுகிறோம், பயிற்சி செய்கிறோம். இது தான் தினமும் தொடர்கிறது. இதனால் நாங்கள் எங்கள் இயல்பை இழந்துள்ளோம் என்றார்.