கே.எல்.ராகுலை தாக்க முயன்ற இங்கிலாந்து ரசிகர்கள் - கடுப்பான விராட் கோலி

Viratkohli INDvsENG KLRahul
By Petchi Avudaiappan Aug 14, 2021 03:05 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ரசிகர்கள் இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் மீது ஷாம்பெயின் கார்க்குகளை வீசியது பரபரப்பை பெரும் ஏற்படுத்தியது.

புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து-இந்தியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்று வந்த நிலையில் இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

அப்போது கேலரியில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் திடீரென கே.எல்.ராகுல் மீது ஷாம்பெயின் கார்க்குகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனைப்பார்த்து கடுப்பான இந்திய கேப்டன் விராட் கோலி அந்த கார்க்குகளை எடுத்து வீசுமாறு கோபத்துடன் ராகுலுக்கு சிக்னல் கொடுத்தார். ரசிகர்களின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.