கே.எல் ராகுல் - பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை! ரசிகர்கள் வாழ்த்து

Delhi Capitals KL Rahul Indian Cricket Team IPL 2025
By Thiru Mar 25, 2025 11:47 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் கே.எல்.ராகுல் - பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

கே.எல் ராகுலுக்கு பெண் குழந்தை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே.எல்.ராகுல் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி தம்பதியினர், தங்களது வாழ்க்கையின் புதிய அத்தியாயமாக பெண் குழந்தையை வரவேற்றுள்ளனர்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

நீண்ட நாட்களாக காதலித்து வந்த கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டி, கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது, தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிவித்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பாரா?

சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற கே.எல்.ராகுல் முக்கியப் பங்காற்றினார்.

மேலும், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில் அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

ஆனால் குழந்தை பிறப்பு காரணமாக, ஐபிஎல் போட்டிகளின் ஆரம்ப  சில ஆட்டங்களில் மட்டும் விளையாட மாட்டார் என தெரியவந்துள்ளது.