தன் மனைவியோடு மஹாகாள் சிவன் கோயில் வழிபாடு செய்த கே.எல்.ராகுல்... - வீடியோ வைரல்...!

Viral Video KL Rahul
By Nandhini Feb 27, 2023 11:29 AM GMT
Report

தன் மனைவி அதியா ஷெட்டியுடன் மஹாகாள் சிவன் கோயில் கே.எல்.ராகுல் வழிபாடு செய்தார்.

கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்

பாலிவுட் நடிகை அதியா ஷெட்டிக்கும் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும் கடந்த ஜனவரி 23ம் தேதி திருமணம் நடைபெற்றது.

கோடிக்கணக்கில் குவிந்த பரிசுகள்

சுனில் ஷெட்டி, கே.எல்.ராகுலுக்கும் அவரது மகள் அதியா ஷெட்டிக்கும் ரூ.50 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை பரிசாக அளித்தார். விராட் கோலி, கே.எல் ராகுலுக்கு ரூ.2.17 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை வழங்கினார். எம்.எஸ். தோனி ரூ.80 லட்சம் மதிப்புள்ள கவாஸாகி நிஞ்சா பைக்கை பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது.

kl-rahul-athiya-shetty-viral-video

வழிபாடு செய்த தம்பதி

சிவபெருமானின் பன்னிரண்டு போற்றப்படும் ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான கோவில் மஹாகாள் கோயில்.

உஜ்ஜயினியில் உள்ள மஹாகாள் சிவன் கோயிலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் அவரது மனைவி பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி நேற்று சென்றனர். புதுமணத் தம்பதிகள் பாபா மஹாகாலிடம் ஆசி பெற்று, 'பஸ்மார்த்தி' விழாவில் கலந்து கொண்டனர்.

இவர்களை பார்த்த பக்தர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். சமீபத்தில், காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விரைவில் குணமடைய ரசிகர்கள் இக்கோவிலில் பிரார்த்தனை செய்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.