கே.எல்.ராகுலின் காதலி இவரா? - எப்போது திருமணம் தெரியுமா?

By Petchi Avudaiappan Apr 20, 2022 10:11 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

பிரபல இந்திய அணி வீரர் கே.எல்.ராகுலின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக திகழும் கே.எல்.ராகுல் அதிரடி ஆட்டத்தின் மூலம் தனக்கென ரசிகர்களை கொண்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இவர் லக்னோ அணியை வழிநடத்தி வருகிறார்.

இதனிடையே கே.எல்.ராகுலும், பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும் பல நாட்களாக காதலித்து வருகின்றனர். பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சுனில் ஷெட்டியின் மகளான அதியா லக்னோ அணியின் போட்டிகளை ஒன்று விடாமல் மைதானத்திற்கு வந்து பார்த்து வருகிறார்..

இந்நிலையில் இவர்கள் இருவரும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.