கேப்டனாக பொறுப்பேற்ற முதல் டெஸ்டில் புதிய சாதனை படைத்த கே.எல்.ராகுல் - என்ன தெரியுமா?
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பேற்றதும் கே.எல்.ராகுல் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஜோகன்னஸ்பெர்க்கில் நடந்த இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன் முதுகுவலி காரணமாக கேப்டன் விராட் கோலி விலக கடைசி நேரத்தில் கே.எல்.ராகுல் கேப்டனாக பொறுப்பேற்றார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இவர் கேப்டன் பொறுப்பை ஏற்பது இதுவே முதல்முறை என்ற நிலையில் இதன் மூலம் கே.எல்.ராகுல் புதிய சாதனையை படைத்திருக்கிறார்.
இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஒரு சில வீரர்களில் கேஎல் ராகுலும் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார். இதற்கு முன்னதாக, சுனில் கவாஸ்கர், முகமது அசாருதீன், அஜித் வடேகர் மற்றும் பிஷன் சிங் பேடி ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளனர். தற்போது இந்தப் பட்டியலில் கேஎல் ராகுல் இணைந்திருக்கிறார்.
மேலும் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தில், முதல்முறையாக ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பை ஏற்க இருந்த ரோகித் சர்மா, காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். ஆகையால் ஒருநாள் போட்டிகளுக்கும் கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்லை... ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்து பேசிய கயாடு லோஹர்! Manithan
