அதிரடி காட்டிய பாண்டியா ,மாஸ் காட்டிய ரஸ்ஸல் : கொல்கத்தாவுக்கு 157 ரன்கள் இலக்கு

TATA IPL IPL 2022
By Irumporai Apr 23, 2022 12:20 PM GMT
Report

கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான ஆட்டத்தால் கொல்கத்தா அணி வெற்றி பெற 157 ரன்கள் இலக்குவைத்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 35-வது லீக் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகிறது.

மும்பை DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் அணி தொடக்க வீரர்களான விருத்திமான் சாஹா, சுப்மன் கில் ஆகியோர் சொற்ப ரன்களிலேயே விக்கெட்டை இழந்தனர்.

இவர்களை தொடர்ந்து டேவிட் மில்லர் 27 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க மறுபக்கம் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன்பின்னர் வந்த வீரர்கள், ஆண்ட்ரே ரஸ்ஸலின் ஒரே ஓவரில் (இறுதி ஓவர்) 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. கொல்கத்தா அணி பந்துவீச்சை பொறுத்தளவில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரஸ்ஸல் 4, டிம் சவுத்தி 3, உமேஷ் யாதவ், சிவம் மாவி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.