பெங்களூருவை அடித்து துரத்திய கொல்கத்தா - கெத்து காட்டும் கே.கே.ஆர்.
ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.
அபுதாபியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூா் 19 ஓவா்களில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அடுத்து ஆடிய கொல்கத்தா 10 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் அடித்து வென்றது. பெங்களூா் இன்னிங்ஸில் தடுமாற்றத்துடன் காணப்பட்ட பேட்டிங் வரிசையை கொல்கத்தா பௌலா்கள் ஆன்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்கரவா்த்தி சரித்தனா்.
பின்னா் கொல்கத்தா இன்னிங்ஸில் ஷுப்மன் கில் - வெங்கடேஷ் ஐயா் ஜோடி அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது.
இந்த ஆட்டத்தின் மூலம் ஆா்சிபி வீரா்கள் ஸ்ரீகா் பரத், வனிந்து ஹசரங்கா, கொல்கத்தா வீரா் வெங்கடேஷ் ஐயா் ஆகியோா் முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் களம் கண்டனா்.
இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்தில் இருந்த கொல்கத்தா, 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி அணி தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது.