சீறிய கொல்கத்தா .. அடக்கிய மஞ்சள் படை : 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி
ஐபிஎல் தொடரில் 33வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின, இதில் சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
களம் இறங்கிய சென்னை அணி
இந்த போட்டியில் டாஸ் வென்றகொல்கத்தா பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, சென்னை தொடக்க வீரர்களாக கெய்குவாட், கான்வே களமிறங்கினர் கெய்குவாட் 35 ரன்களிலும், கான்வே 56 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.
அடுத்து வந்த ரஹானே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ருத்ர தாண்டவமாடினார். 24 பந்துகளில் அரைசதம் கடந்த ரஹானே சிக்சர்களாக பறக்க விட்டார்.
அதிக ஸ்கோர்
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்துள்ளது.236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில்கொல்கத்தா அணி சுனில் நரேன் விக்கெட்டை இழந்தது - அவர் ரன் எதுவும் எடுக்காமல் ஆகாஷ் சிங் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் .
A Good Day in Yellove! ??#KKRvCSK #WhistlePodu #Yellove ? pic.twitter.com/j8JVTWqaOk
— Chennai Super Kings (@ChennaiIPL) April 23, 2023
அதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தாலும் ரன்களை குவிக்கமுடியவில்லை இந்த நிலையில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில், 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 10 புள்ளிகளை பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி