யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கடா : கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த சென்னை அணி
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 33வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின, இதில் சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது
களம் இறங்கிய சென்னை அணி
இந்த போட்டியில் டாஸ் வென்றகொல்கத்தா பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, சென்னை தொடக்க வீரர்களாக கெய்குவாட், கான்வே களமிறங்கினர் கெய்குவாட் 35 ரன்களிலும், கான்வே 56 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த ரஹானே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ருத்ர தாண்டவமாடினார். 24 பந்துகளில் அரைசதம் கடந்த ரஹானே சிக்சர்களாக பறக்க விட்டார்.
அதிக ஸ்கோர்
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்துள்ளது. 29 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் விளாசிய ரஹானே 71 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். ஜடேஜா 18 ரன்களும், கேப்டன் தோனி 2 ரன்களும் எடுக்க சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது.
??Ajju ruling from West to East?#KKRvCSK #WhistlePodu #Yellove ?pic.twitter.com/dpr2C4tfEi
— Chennai Super Kings (@ChennaiIPL) April 23, 2023
இதுதான் ஐபிஎல் தொடரில் எடுக்கப்பட்ட அதிகப்பட்ச ஸ்கோர் ஆகும். இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணி 120 பந்துகளில் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.