டிகாக் அதிரடி அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்!

Irumporai
in கிரிக்கெட்Report this article
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனின் 34-வது லீக் ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனால் மும்பை அணி முதலில் பேட் செய்தது.
அந்த அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் டிகாக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அமீரகத்தில் இந்த சீசனில் ரோகித் விளையாடும் முதல் ஆட்டம் இது. இருவரும் முதல் விக்கெட்டிற்கு 78 ரன்களை சேர்த்தனர்.
ரோகித் 30 பந்துகளுக்கு 33 ரன்களை எடுத்து சுனில் நரைன் சுழலில் சிக்கி அவுட்டானார். தொடர்ந்து வந்த சூரியக்குமார் யாதவும் 10 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்களை எடுத்து பிரசித் கிருஷ்ணா வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.
டிகாக் அசத்தலாக விளையாடி 37 பந்துகளில் அரை சதம் எடுத்தார். ஐபிஎல் அரங்கில் அவர் எடுத்த 16-வது அரை சதமாக இது அமைந்தது
. 55 ரன்களில் அவர் வெளியேற பொல்லார்ட் கிரீசுக்கு வந்தார். 15 ஓவர் முடிவில் 106 ரன்களை எடுத்திருந்தது மும்பை. கடைசி 5 ஓவர்களில் விளையாட சரியான நேரத்தில் பவர் ஹிட்டரான பொல்லார்ட் வந்திருந்தார். அதிரடியாக ரன் குவிக்க விரும்பி இஷான் கிஷன் 14 ரன்களில் வெளியேறினார்.
பொல்லார்ட் இயல்பான இன்னிங்ஸை விளையாடினார். இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி நல்ல ரிதத்தில் பந்து வீசிக் கொண்டிருந்த பிரசித் கிருஷ்ணாவின் கடைசி ஓவரை 18 ரன்கள் விளாசினார் .
. கடைசி ஓவரில் பொல்லார்ட் ரன்-அவுட் மற்றும் குர்ணால் பாண்ட்யா விக்கெட்டுகளை கைப்பற்றி கொல்கத்தா அசத்தியிருந்தது.
அந்த ஓவரை ஃபெர்குசன் மிகவும் சிறப்பாக வீசியிருந்தார். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்தது மும்பை அணி. கொல்கத்தா அணி 156 ரன்கள் எடுத்தால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறலாம்.
கொல்கத்தா அணி சார்பாக பிரசித் கிருஷ்ணா, லோக்கி பெர்குசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.