ரூ.25 கோடிக்கு வாங்கப்பட்ட வீரர் பந்துவீசாதது துரதிர்ஷ்டவசமானது - பயிற்சியாளர்

Kolkata Knight Riders IPL 2026
By Sivaraj Apr 02, 2026 12:40 PM GMT
Report

2026 ஐபிஎல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கேமரூன் கிரீன் பந்துவீசாததைக் குறிப்பிட்டு பயிற்சியாளர் பேசியுள்ளார். 

கேமரூன் கிரீன்

வான்கடே மைதானத்தில் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Cameron Green

இப்போட்டியில் கொல்கத்தா அணியில் கேமரூன் கிரீன் (Cameron Green) 18 ரன்கள் எடுத்தார். ஆனால், ஆல்ரவுண்டர் வீரரான கிரீன் ஒரு ஓவர் கூட வீசவில்லை.

இதுகுறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கூறுகையில், "கேமரூன் கிரீன் இதுவரை பந்துவீச முடியாமல் போனது 'துரதிர்ஷ்டவசமானது'. ஆந்த்ரே ரஸ்லுக்கு மாற்றாக கிரீனை முன்னிறுத்துவதே அணியின் நீண்டகால திட்டமாகும்" என்றார். 

கீழ் முதுகுப் பகுதியில் காயம்

அதேபோல் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறும்போது, கீழ் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போதைக்கு அவரது (கிரீன்) பந்துவீச்சு பணிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் 10 முதல் 12 நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் பந்துவீசத் தொடங்கலாம் என உறுதிப்படுத்தியுள்ளது. 

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் ரூ.25.2 கோடிக்கு கேமரூன் கிரீன் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Cameron Green 

Cameron Green