2021 ஐபிஎல் தொடரின் மோசமான கேப்டன் இவர் தான் - ரசிகர்கள் கருத்து

ipl2021 eoinmorgan CSKvKKR
By Petchi Avudaiappan Oct 15, 2021 07:57 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் மிக மோசமான கேப்டன் என்ற பெயரை கொல்கத்தா அணி கேப்டன் இயான் மோர்கன் பெற்றுள்ளார். 

ஐபிஎல் 2021 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளது. சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிஎஸ்கே 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதனிடையே கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் இந்த சீசன் முழுவதும் மோசமாக விளையாடி உள்ளார். ஒரு அணியின் கேப்டன் மற்ற வீரர்களுக்கு எடுத்துகாட்டாக இருக்க வேண்டும். ஆனால் இயான் மோர்கன் இந்த சீசனில் எடுத்த அதிகபட்ச ரன்னே 8 தான்  என்பது உச்சக்கட்ட அதிர்ச்சியாக அமைந்துள்ளது. 

இந்த  சீசனில் நான்கு முறை இயான் மோர்கன் டக் அவுட்டாகி உள்ள மோர்கன் இறுதி போட்டியில் மோர்கன் 4 ரன்னில் அவுட்டானார். 14 போட்டிகளில் பேட்டிங் செய்த இயான் மோர்கன் 44 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வெல்லாமல் போனதற்கு இயான் மோர்கனின் மோசமான ஃபார்மும் முக்கிய காரணம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.