தொடர்ந்து 5 சிக்ஸர்; சாதனை படைத்த துப்புரவு பணியாளர் - யார் இந்த ரிங்கு சிங்?
ரிங்கு சிங் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
ரிங்கு சிங்
கொல்கத்தா அணிக்காக விளையாடுபவர் ரிங்கு சிங்(25). குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி 5 பந்துகளில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்து விளாசினார். ரிங்கு சிங் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர். இவருக்கு உடன் பிறந்தவர்கள் 5 பேர்.
இவரது தந்தை கேஸ் சிலிண்டர்களை செலிவரி செய்பவர். ரிங்கு சிறு வயதிலேயே துப்புரவு பணியாளராக வேலை செய்திருக்கிறார். கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் 16 வயதுக்குட்பட்ட உத்தரப்பிரதேச அணியில் இடம் பிடித்தார். முதல் ஆட்டத்தில் 83 ரன்களை குவித்தார்.
சாதனை
இவர், இடது கை பேட்ஸ்மேன் ரெய்னா போல் அதிரடியாக விளையாடுகிறார் எனப் பேசப்பட்டது. அடுத்து 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் அணி ரிங்கு சிங்கை வாங்கியது. அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு கே கே ஆர் அணி ரிங்கு சிங்கை 80 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
இந்நிலையில் அபுதாபியில் நடைபெற்ற டி20 தொடர் ஒன்றில் பிசிசிஐ யின் அனுமதி பெறாமல் ரிங்கு சிங் பங்கேற்றதால் அவருக்கு மூன்று மாதம் தடைவிதிக்கப்பட்டது. அதன்பின், முழங்காலில் காயம் ஏற்பட்டதால் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.
2022 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியில் இடம் பிடித்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக 23 பந்தில் 42 ரன்கள் அடித்து அசத்தினார்.
தற்போது நடப்பு சீசனில் தனது முழு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.