5 தொடர் தோல்விகளுக்குப் பிறகு கொல்கத்தா வெற்றி... ராஜஸ்தானை வீழ்த்தியது

Kolkata Knight Riders Rajasthan Royals TATA IPL IPL 2022
By Petchi Avudaiappan May 02, 2022 06:05 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

 மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற 47வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில்  டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

5 தொடர் தோல்விகளுக்குப் பிறகு கொல்கத்தா வெற்றி... ராஜஸ்தானை வீழ்த்தியது | Kkr Beat Rr By 7 Wickets

அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டும் பொறுப்புடன் விளையாடி அரைசதமடித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் டிம் சௌதி 2 விக்கெட்களை கைப்பற்றினார். 

இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட கொல்கத்தா அணியில் நிதிஷ் ரானா 48, ரிங்கு சிங் 42,  கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 34 ரன்கள் எடுக்க 19.1 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன்மூலம் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்த கொல்கத்தா அணி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.