தடுமாறிய ஐதராபாத்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா !

kkr ipl2021 KKRvSRH
By Irumporai Oct 03, 2021 06:23 PM GMT
Report

துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் 49-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. சாகா முதல் ஓவரிலேயே எல்.பி.டபிள்யூ. மூலம் ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் 10 ரன்னில் வெளியேறினார். கேன் வில்லியம்சன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்

அதன் பின்னர் , அப்துல் சமாத் 25 ரன்களும், பிரியம் கார்க் 21 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களே அடிக்க முடிந்தது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் டிம் சவுத்தி, ஷிம் மாவி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  களமிறங்கிய கொல்கத்தாதொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய வெங்கடேஷ் அய்யர் 8 ரன்னிலும், பிரியம் கார்க் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்

பின்னர் .களம் கண்ட ஷுப்மான் கில் பொறுப்புடன்  அரை சதம் கொடுத்து  57 ரன்னில்அவுட்டானர் அதன் பின்னர் நிதிஷ் ராணா 25 ரன்னில் ஆட்டமிழக்க  இறுதியில், கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன்மூலம் ஐ.பி.எல் தரவரிசை புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணி தனது ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு எளிதாகியுள்ளது,  புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.