கவுண்டர் பையனைத்தான் கட்டுவோம்; பெண்கள் உறுதிமொழி - அதிர்ச்சி வீடியோ!

Coimbatore Viral Video
By Sumathi Nov 14, 2023 08:00 AM GMT
Report

 வன்னியரசு வெளியிட்டுள்ள வீடியோவால் சர்ச்சை வெடித்துள்ளது.

கேகேசி பாலு

விசிக மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கேகேசி பாலு உள்ளார்.

vanniyarasu

அவர் சொல்ல சொல்ல பெண்கள் உறுதி மொழி ஏற்கிறார்கள். கல்ணாயம் பண்ணிக்கிறோம். கவுண்டர் வீட்டு பையனையே. இது போதும், இது போதுமே. எனக்கு வேறு எதுவும் வேண்டாம் அம்மா, சத்தியமே சத்தியமே சின்னமலை சத்தியமே எனும் வசனங்கள் இடம்பெற்றுள்ளது.

அதிர்ச்சி வீடியோ

இது சாதியத்தை ஊக்குவிப்பதாக விசிக குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்த அவரது பதிவில், "சாதியக்கட்டமைப்பை பாதுகாக்க புது புதுசா அண்ணாமலை கிளம்புகிறார்கள்.

கவுண்டர் பையனையே கல்யாணம் கட்டணுமுன்னு சொன்னதும் வெட்கப்பட்டு தலை குணியும் பெண்களை பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.