சரியான சமயத்தில் முதலுதவி செய்திருந்தால் கேகே உயிர் பிழைத்திருப்பார் : உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்

krishnakumar kunnath
By Irumporai Jun 02, 2022 10:52 AM GMT
Report

பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்  மாரடைப்பு காரணமாக  காலமானார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்த அவர், உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இந்த நிலையில் கேகேவின்மரணம் குறித்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறு கையில் :

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, பாடகர் கேகே மேடையில் படு உற்சாகமாக, அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். சில சமயங்களில் கூட்டத்துடன் நடனமாடினார். இது அதிகப்படியான உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதனால் இதயத் தடுப்புக்கு செல்லும் இரத்த ஓட்டம் நிறுத்தப்பட்டது. அதிகப்படியான உற்சாகம் சில நிமிடங்களுக்கு இரத்த ஓட்டத்தை நிறுத்தியதன் விளைவாக, மிகக் குறுகிய காலத்திற்கு சீரற்ற முறையில் இதயத் துடிப்பு இருந்துள்ளது. உடனே, மாரடைப்பு ஏற்பட்டது.

இதன் விளைவாக, கேகே மயங்கி விழுந்தார். மேலும் அவர் மயங்கி விழுந்த உடனேயே இதய நுரையீரல் மறுமலர்ச்சி சிகிச்சை (சிபிஆர்) வழங்கியிருந்தால் அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாம். பாடகருக்கு நீண்டகாலமாகவே, இதய பிரச்சினை இருந்துள்ளது.

சரியான சமயத்தில் முதலுதவி செய்திருந்தால்  கேகே உயிர் பிழைத்திருப்பார் :  உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல் | Kk Had Heart Block Cpr Was Given On Time Doctor

ஆனால், அதனை கவனிக்காமல் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் அவர் இருந்தது இப்போது அவர் உயிரை பறிக்கும் அளவுக்கு மோசமாக மாறிவிட்டது. என்றும் மறைந்த பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்திற்கு, இதயத்தின் பல பகுதிகளிலும் அடைப்புகள் இருந்தன.

சரியான நேரத்தில் சிபிஆர் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் கூறினார்.

பாடகர் கே.கே.வின் உடல். கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் மும்பையில் உள்ள வெர்சோவா தகன மையத்தில் கே.கே-வின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.