"சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்..நம்ம தேன் தமிழ்தெளிப்பான்" - கீழடியில் உறைகிணறு கண்டுபிடிப்பு

excavation kizhadi recent findings vaigai civilisation
By Swetha Subash Dec 20, 2021 06:56 AM GMT
Report

சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்து நிலவி வந்த நிலையில் ,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.

சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகள்முத்துமணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், பெண்கள் விளையாடிய சில்லு, தாயக்கட்டை,

சதுரங்க காய்கள், சிறுகுழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள் ஆகிய சங்க காலம் குறிப்பிடும் பல தொல்பொருட்களும் இங்கு அதிகளவில் கிடைத்திருக்கின்றன.

தமிழக அரசு கட்ட அகழாய்வு பணிகளை நடத்தியுள்ளது.

8ம் கட்ட அகழாய்விற்காக திட்ட வரைவை தமிழக தொல்லியல் துறை, ஒன்றிய அரசிடம் விண்ணப்பித்து விட்டது.

இந்நிலையில் கீழடியில் பாலன் என்பவரது வயலில் கடந்த 20 நாட்களாக தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்காக இயந்திரம் மூலம் குழி தோண்டினர்.

அப்போது குழியின் ஒரு பகுதியில் 7 அடுக்குகள் கொண்ட உறைகிணறு தென்பட்டது.

குழி தோண்டியதும் அருகில் நீரூற்றும் உருவாகி குழியினுள் தண்ணீர் நிரம்ப தொடங்கியது.

இதுபற்றி தமிழக தொல்லியல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

தொல்லியல் ஆய்வாளர்கள் உறைகிணறு உள்ள இடத்தை பார்வையிட்டு அடுத்தகட்ட அகழாய்விற்கு அனுமதி கிடைத்ததும், இந்த உறைகிணறு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

இதுவரை கீழடி அகழாய்வில் இரண்டு அடுக்குகள் முதல் 32 அடுக்குகள் வரையான 18 உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கீழடி நாகரிகம் மூலமாகவே தமிழ் நாகரிகம் தொன்மையானது என்பது நிருபணம் ஆகியுள்ளது.