தோழிக்கு கொடுத்த மருத்துவ முத்தம் பறிபோன அமைச்சர் பதவி.. எங்கு தெரியுமா?
இங்கிலாந் சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்க் தனது பதவியினை ராஜினாம செய்துள்ளார்.
நடந்தது என்ன:
இங்கிலாந்தில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படுள்ளது.
ஆனால் கொரோனா முதல் அலையின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக இங்கிலாந் இருந்தது.
ஆகவே அங்கு சமூக இடைவெளி கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது
தோழிக்கு மருத்துவ முத்தம்:
. இந்த நிலையில் அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி மாட் ஹான்க் கொரோனா சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் வைத்து பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சமூக இடைவெளி விதிமுறைகள் அமலில் இருக்கும் மாட் ஹான்க் தனது உதவியாளருக்கு முத்தம் கொடுத்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது மேலும், அந்த நாட்டின் பிரபல தினசரி பத்திரிகையான சன் பத்திரிக்கையில் தொடர்பான புகைப்படங்களுடன் வெளியானது.

இந்த சம்பவம் அப்போது பேசு பொருளானது , தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால் மீண்டும் முத்த சம்பவம் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு மாட் ஹான்க் கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்னிப்பு கோரினார்.
ஆகவே இந்த பிரச்சினை முடிந்து விட்டதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
ஆனாலும் இந்த விவகாரத்தில் சுகாதார மந்திரி மாட் ஹான்க் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
I have resigned as Health Secretary pic.twitter.com/eyWi1AA19i
— Matt Hancock (@MattHancock) June 26, 2021
முத்த பிரச்சினையால் ஒரு அமைச்சர் தனது பதவியினை ராஜினாம செய்துள்ளது இங்கிலாந்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.