இது புதிய முத்தம் : காதலர்களுக்காக வந்தாச்சு Remote Kissing Device
முத்தங்களை பரிமாறி காதலின் அடுத்த நிலைக்கு சென்றுள்ள காதலர்களுக்கு புதிய கருவியை சீன ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Remote Kissing Device
காலங்கள் பல மாறினாலும் காதலர்களுக்கு தொலைவு என்பதே வருத்தமான ஒன்றுதான் ,இந்த சோகத்தை மறக்க காதலர்கள் முதலில் கடித போக்குவரத்து இருந்தது , தற்போது முகத்தை பார்த்து பேச வீடியோ கால் வசதி வந்துள்ளத்து.
இந்த நிலையில் தொலைவில் பிரிந்து இருக்கும் காதலர்களுக்கு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர் சீன ஆய்வாளர்கள் . சீனாவின் சான்சோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் முத்த கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கருவி தற்போது சீனாவில் பேசுபொருளாகியுள்ளது. சிலிக்கான் ரப்பர் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த முத்த கருவி கான்ட்ராப்ஷனில் பிரஷர் சென்சார்கள் மூலம் இயங்குகிறது,இது நமக்கு முத்தம் கொடுத்தால் அது உண்மையான முத்தத்தை போன்றே இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சீனாவில் கண்டுபிடிப்பு
நம்முடைய உதட்டின் அழுத்தம், வெப்பநிலை மற்றும் இயக்கத்தை அப்படியே இந்த கருவி பிரதிபலிக்கும்,இதனை பயன்படுத்துவதும் மிகவும் சுலபமானது. இந்த கருவிக்கான அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பின்னர் இந்த ஆப்பில் முத்த கருவைியை இணைக்க வேண்டும் அவ்வளவுதான். இப்போது சூடான முத்தத்தை உங்களின் காதலி பெறலாம்.
இந்த அறிய வகை கண்டுபிடிப்பின் விலை இந்திய மதிப்பில் ரூ.3,433தான் என கூறப்படுகின்றது அப்புறம் ரிமோட் கிஸ் டிவைஸ் வாங்க ரெடியா?