சிறுவனை அணைத்து நாக்கை நீட்டி முத்தம் கேட்ட தலாய்லாமா : முகம் சுளிக்கும் நெட்டிசன்கள்

Sexual harassment
By Irumporai Apr 10, 2023 07:08 AM GMT
Report

திபெத் மதகுரு தலாய்லாமா ஒரு சிறுவனிடம் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தலாய்லாமா

திபெத் மதக்குருவான தலாய் லாமா சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் வசித்து வருகின்றார். சில நேரங்களில் தலாய்லாமா கடும் சர்ச்சையில் சிக்குவதுண்டு அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ பதிவின் மூலமாக புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அதில் திபெத் புத்தமத தலைவரான தலாய்லாமா ஒரு நிகழ்ழ்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார், அப்போது ஒரு சிறுவனை தனது அருகில் அழைத்து முத்தமிட்டுள்ளார். அதன் பிறகு தனது வாயிலிருந்து நாக்கை நீட்டியுள்ளார், அப்போது பயந்து பின் வாங்கியுள்ளான், ஆனால் தலாய்லாமா அவனது கையை விடாமல் பிடித்தன் காரணமாக அவரது நாக்கில் முத்தமிட்டு அங்கிருந்து சென்றுள்ளான்.  

சிறுவனை அணைத்து நாக்கை நீட்டி முத்தம் கேட்ட தலாய்லாமா : முகம் சுளிக்கும் நெட்டிசன்கள் | Kiss The Boy On The Lips Dalai Lama

வீடியோவால் சர்ச்சை

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து தலாய்லாமாவுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றது, இன்னும் ஒரு சிலர் தலாய்லாமா மீது போக்சோ வழக்கு பதிய வேண்டும் என்றும் கூறி வருகின்றனர், இந்த நிலையில் தலாய்லாமா தனது செயல் யாரையும் புண்படுத்தும் வகையில் இருந்தால் மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார்.