"அட்டைக்கத்தியெல்லாம் தளபதின்னா அன்னப்பூரணியும் அம்மன் தான்" - மீண்டும் முதல்வரை சீண்டிப்பார்க்கும் கிஷோர் கே சுவாமி?

kishore k swamy attacks dmk in twitter after release once again
By Swetha Subash Dec 27, 2021 08:41 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

இரு தினங்களுக்கு முன்பு சிறையிலிருந்து விடுதலையான கிஷோர் கே சுவாமி சிறையில் இருந்து வந்ததுமே திமுகவை விமர்சனம் செய்ய தொடங்கியிருக்கிறார்.

பெரியார், திராவிட அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து பதிவிட்ட வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்த கிஷோர் கே சாமியை சமீபத்தில் நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்ய தொடங்கியிருக்கிறார்.

தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட அரசியல் தலைவர்கள் குறித்து பதிவிட்டு வந்ததையடுத்து, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், ஜூன் 10-ம் தேதி புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து, 3 பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்து, ஜூன் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, தாம்பரம் கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேலும், தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவர் கோரிய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து சென்னை ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அறிவுரை கழகத்தில் கிஷோர் கே சாமி மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த அறிவுரைக்கழகம் கிஷோர் கே சுவாமி மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை உறுதி செய்தது.

தன் மீது விதிக்கப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் கிஷோர் கே சுவாமி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு கடந்த 23ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரித்த நீதிமன்றம் கிஷோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு சிறையிலிருந்து கிஷோர் கே சுவாமி விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், சிறையில் இருந்து வந்ததும் திமுகவை விமர்சனம் செய்ய தொடங்கியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்,

கருணாநிதி கதை வசனத்தில் வெளியான பாராசக்தி படத்தை பதிவிட்டு, அட்டைக்கத்தியெல்லாம் தளபதின்னா அன்னப்பூரணியும் அம்மன் தான் என்று பதிவிட்டுள்ளார்.

சிறையில் இருந்து வந்ததுமே முதல்வர் ஸ்டாலினை மறைவாக தாக்கி விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளார்.