வைரலாகும் கிருத்திகா உதயநிதியின் பதிவு: விஜய் மீது விமர்சனமா?

Vijay Kiruthiga Udhayanidhi
By Fathima Mar 07, 2026 08:53 AM GMT
Report

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், இயக்குனருமான கிருத்திகா உதயநிதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து விவாதத்தை கிளப்பியுள்ளது.

அதில், 

பிரபலம் என்பது யார்? நீங்கள் உங்கள் மீதான மக்களின் பார்வையும் தான் பிரபலமாக்குகிறது, திரையில் தெரியும் பிம்பத்தை நம்பி ”மக்களின் பார்வை தான் நான்” என நினைத்து உங்களது சுயத்தை இழக்கிறீர்கள், அப்படியானால் கடுமையான சிக்கலில் இருக்கிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.

வைரலாகும் கிருத்திகா உதயநிதியின் பதிவு: விஜய் மீது விமர்சனமா? | Kiruthiga Udhayanidhi Stalin Post Viral

தவெக தலைவர் விஜய்யின் சமீபகால பேச்சுகள் அரசியல் ரீதியாக விமர்சனத்தை சந்தித்து வரும் சூழலில் கிருத்திகா உதயநிதியின் இந்த பதிவு மறைமுகமாக விஜய்க்கு தான் என பலரும் கூறிவருகின்றனர்.

அரசியல் மீதான தெளிவான பார்வை விஜய்யிடம் இல்லை, அரசியல் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம், தனக்காக கூடும் கூட்டத்தை தலைவராக வழிநடத்த தெரியவில்லை என்றெல்லாம்  விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.