இரக்கம் இல்லையா..10 வருஷமா அதையே செய்யும் கிருத்திகா - பாவம் உதயநிதி!

Udhayanidhi Stalin Tamil Cinema Kiruthiga Udhayanidhi
By Sumathi Nov 16, 2022 08:32 AM GMT
Report

கிருத்திகா உதயநிதி பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

கிருத்திகா உதயநிதி

கலைஞர் கருணாநிதி குடும்பத்தின் மருமகள், இளம் அரசியல் வாதியும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா. இவர் தமிழில் வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

இரக்கம் இல்லையா..10 வருஷமா அதையே செய்யும் கிருத்திகா - பாவம் உதயநிதி! | Kiruthiga Udhayanidhi Gets Attention

விஜய் ஆண்டனியை வைத்து காளி படத்தை இயக்கியப்போதும் அந்தளவிற்கு ரீச் ஆகவில்லை. அதனையடுத்து பேப்பர் ராக்கெட் என அவர் இயக்கிய வெப்சீரிஸ் பாராட்டுகளை பெற்றது. கிருத்திகாவும் உதயநிதியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

வைரல் ட்வீட்

இவர்களுக்கு இன்பன் உதயநிதி என்ற மகன் ஒருவர் உள்ளார். கிருத்திகா கடந்த 2013ஆம் ஆண்டு டிவிட்டரில் தனது கணவருடன் சாட் செய்த ஸ்க்ரீன் ஷாட்டை நெட்டிசன் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதில் கிருத்திகா உதயநிதியிடம் டின்னருக்கு என்ன வேண்டும் என கேட்டுள்ளார்.

அதற்கு உதயநிதி, கடினமான கேள்வி லைஃப்லைன் யூஸ் பண்ணலாமா என கேட்கிறார். உடனே எஸ் என்று ஆப்ஷன் கொடுத்துள்ள கிருத்திகா, a) dosa b) dosa c) dosa d) dosa என 4 ஆப்ஷன்களுமே தோசையை கொடுத்துள்ளார்.

இந்த ஸ்க்ரீன்ஷாட்டை தற்போது பகிர்ந்துள்ள கிருத்திகா, 10 வருடங்கள் ஆகிவிட்டபோதும் அதே ஆப்ஷன் தான் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலர் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.