15 பெண்களை சீரழித்த பிக்பாஸ் விக்ரமன் - ஆதாரங்களை வெளியிட்ட பாதிக்கப்பட்ட பெண்!

Tamil nadu Crime
By Jiyath Jul 16, 2023 12:31 PM GMT
Report

விடுதலை சிறுத்தைகளை கட்சி உறுப்பினர் விக்ரமன் தன்னை ஏமாற்றியதாக கூறி பெண் ஒருவர் கடுமையான குற்றசாட்டுகளை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விக்ரமன்

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்தான் விக்ரமன். இவர் அதில் இரண்டாம் இடத்தை பிடித்தார். தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார் . விக்ரமனுக்கு எதிராக கிருபா முனுசாமி என்ற பெண் சமூக வலைத்தளங்களில் கடுமையான புகார்களை வைத்துள்ளார்.

புகார்

அதில் "கடந்த மாதங்களில் பெரும் வேதனைகளையும், ஏமாற்றத்தையும் அனுபவித்த பின்னர்தான் இந்த விஷயங்களை நான் பொது வெளியில் சொல்கிறேன். 2013 ஆம் ஆண்டு முதல் எனக்கு விக்ரமனை தெரியும். அந்த ஆண்டில் நிகழ்ச்சி ஒன்றில் நான் பங்கேற்றேன், அதில் விக்ரமனும் பங்கேற்றார்.

15 பெண்களை சீரழித்த பிக்பாஸ் விக்ரமன் - ஆதாரங்களை வெளியிட்ட பாதிக்கப்பட்ட பெண்! | Kiruba Munusamy Slams Vikraman And Says Ibc 09

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு நான் லண்டன் புறப்பட்டபோது அவராகவே வந்து என்னை வழி அனுப்பினார். அதன் பிறகு அக்டோபர் மாதம் 2020 ஆம் ஆண்டு என் மீது காதல்கொள்ளும் விதமாக பேசத்தொடங்கினார். பேசி இரண்டு நாட்களே ஆன நிலையில் விசிக கட்சியில் சேர நிர்வாகிகள் அழைத்ததாக கூறினார். அதன் பிறகுதான் பொய் சொல்லி அவரே முயன்று என்னை விசிக கட்சியில் சேர்த்தது எனக்கு தெரியவந்தது.

அன்று முதல் அவரது அரசியல் பயணத்திற்கு பல உதவிகளை தொடர்ச்சியாக என்னிடம் கேட்டார். அவர் என்னிடம் அடிக்கடி பணம் கேட்பது குறித்து நான் விவாதிக்கும் போதெல்லாம் அவர் என்னிடம் அச்சுறுத்தும் ரீதியிலும், சாதிய உணர்வோடும் கடுமையாக நடந்து கொண்டார். அதனால் அவரிடம் இருந்து நான் விலக தொடங்கினேன். ஆனால் விக்ரமன் என்னிடம் அழுது, கெஞ்சி நல்லவரைப்போல் நடித்து என்னை சமாதானம் செய்தார்.அதனைத்தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அவருக்கு பண ரீதியாக உதவி செய்வதை நிறுத்தி விட்டேன். மேலும் நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபொழுது 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கூறினார்.

பின்னர் அவர் என்னை பிளாக் செய்தார். மூன்று மாத முயற்சிக்குப் பின்னர் பிக்பாஸில் நுழைவதற்கு முன்னர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதற்கு என்னிடம் மன்னிப்பு கேட்டார். நானும் அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டேன். நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அவர் என்னோடு உறவில் இருந்தார்.அந்த நிலையில்தான் அவருக்கும் அவரது பெண் மேணேஜருக்கும் இருக்கும் தொடர்பு எனக்கு தெரிய வந்தது. அவர்கள் இருவரிடமும் கான்பிரன்ஸ் கால் மூலம் நான் பேசினேன். அப்போது கடந்த ஒன்றரை வருடங்களாக அந்த பெண்ணுடன் நான் தொடர்பில் இருக்கிறேன் என்று விக்ரமன் என்னிடம் ஒப்புக் கொண்டார்.

அதற்கு பிறகு விக்ரமன் தனது முன்னாள் காதலிகள் என்று கூறிய 15 பெண்களிடம் நான் பேசினேன். அப்போதுதான் விக்ரமன் பல பெண்களை ஏமாற்றியது எனக்கு தெரியவந்தது. இது தொடர்பாக அவர்மீது நான் போலீசில் புகாரளிக்கப் போகிறேன் என்று கூறியதும் தொடர்ச்சியாக அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க தொடங்கினார். இருந்தாலும் தற்போது அவர் மீது 20 பக்கங்கள் கொண்ட புகாரை நான் தாக்கல் செய்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் மேலும் இன்னும் சில விஷயங்களை அந்த பெண் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.